தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோணா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதோடு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தமிழகத்தில் அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி, ஒரிசா, ஹரியானா மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளது. அதோடு ஐசியூவில் வைத்து மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.