Categories
மாநில செய்திகள்

“தமிழகத்திற்கு ஆபத்து”…. வனப்பகுதிகளில் உடனே…. அரசுக்கு ஐகோர்ட் திடீர் எச்சரிக்கை…..!!!!

அன்னிய  மரங்களை அகற்ற தமிழக அரசு  ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த மரங்கள் வளர்ந்தால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த அன்னிய மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என  ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி என். சதீஷ்குமார், டி. பரத் சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் வளர்ந்து வரும் அன்னிய  மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான கருத்துரு நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது. காட்டுப் பகுதிகளில் வளர்ந்து வரும் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு வருகின்ற அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இந்த மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லை என்றால் மிகவும் மோசமான  விளைவுகள் ஏற்படும் என அவர் கூறியுள்ளனர்.

Categories

Tech |