தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதில் தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவில் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளார்.