தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை 12ம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது பற்றியும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி துரிதப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்கள். கொரோனா மூன்றாவது முன்னெச்சரிக்கை பணிகள் பற்றியும் மத்திய அரசு விளக்கம் தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.