Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கை….. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…..!!!!!

தொடக்கக்கல்வித் துறைக்கு வட்டாரக்கல்வி அதிகாரிகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 95 பேர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமனம் ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சமூக, பொருளாதார அடிப்படையிலான அரசின் நலத்திட்டங்களை வழங்கும் நோக்கில்தான் பள்ளிகளில் சாதி விபரம் கேட்கப்படுகிறது தவிர, சாதி விவரத்தை சொல்வது கட்டாயம் அல்ல.

ஆகவே விருப்பம் இல்லையெனில் மாணவர்கள் சொல்ல வேண்டாம். அதேபோன்று மாணவிகளிடம் மாதவிடாய் குறித்த விபரங்கள் கேட்கப்படுவதையும் சர்ச்சை ஆக்குகின்றனர். மாணவிகளின் உடல்நலம் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு விஷயங்களைக் கேட்கிறது. அதற்காகவே அது குறித்த விபரங்கள் கேட்கப்படுகின்றன. இனி இத்தகைய விபரங்கள் கேட்பது தவிர்க்கப்படும். இதனிடையில் புதிய தேசிய கல்விக்கொள்கையில் உள்ள அம்சங்கள் எவ்வகையிலும் தமிழ்நாடு அரசு எடுத்துக்கொள்ளவில்லை.

மாணவர்களுக்கு பயன்படும் அடிப்படையில் புதிய திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறோம். 3-ம் வகுப்பு பொதுத்தேர்வு, குலக்கல்வி முறை, இருமொழிக் கொள்கை பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநிலத்திற்க்கென தனி கல்விக்கொள்கையை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

Categories

Tech |