தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிர்ச்சி தரும் தகவலை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டையில் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் மைய நாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சமீப காலமாக சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒலி மாசு அதிக அளவில் உள்ளது. ஒலி மாசால் மக்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒலி மாசை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வரும் காலத்தில் ஆபத்தான சூழலை ஏற்படுத்தக் கூடும். ஒலி மாசை தடுக்கக்கூடிய முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
பட்டாசு வெடிப்பதாலும் வாகனத்தில் அதிக அளவிலான சிசிஏ பயன்படுத்துவதாலும் மொழிமாற்று ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அதன் தன்மையில் இருந்து மாறி அதிக அளவு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.ஒலி மாசை குறைப்பதற்கும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.