Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு பெருமை….! இனி இதற்கும் புவிசார் குறியீடு….? அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொருட்களின் விற்பனை கண்காட்சி சென்னையில் மூன்று நாட்கள் நடக்கிறது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பெருமைப்பட வேண்டும். நாம் தயாரிக்கும் பொருள்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் விதமாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு தலைமை அலுவலகம் சென்னையிலிருந்தாலும் குறைவான அளவிலேயே விண்ணப்பித்திருக்கிறோம். முதல்வரின் உத்தரவின் படி இன்னும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளோம்.

அதன்படி மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனை முதலமைச்சருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று அதனை பெற முயற்சி செய்வோம். பள்ளிக்கல்வித்துறை சார்பாக புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |