Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 7,054 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்திற்கு ரூபாய் 7054 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும் படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்திற்கு தற்போது ரூ. 7054 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்சாரத்தின் சீரமைப்பு பணிக்காக மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாட்டிற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் ரூபாய் 28,204 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழக மின்சாரத் துறையில் உள்ள பலவிதமான பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றன. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வினியோகிக்கப்படும் எனவும், மின் கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |