புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால் தமிழகம் முழுவதிலும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆதலால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்ற பிறகு மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் இரண்டாம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநிலம் முழுவதும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.