தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகம் வரும் பிப்.28ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளியாகவுள்ள நிலையில் அந்த வெளியீட்டு விழாவில் சில முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தற்போது இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட வேறு சில கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.