Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 2000 மருந்துகள்…. வழங்கிய மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் நன்றி…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்துபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகத்திற்கு வழங்கும் ரெம்டெசிவர் நாள் மருந்தை ஒன்றுக்கு 7000 இலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்தை நாளொன்றுக்கு 20 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு முக ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |