தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்நிலையில் வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி வரை மழையும் 25ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.