தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடித்து சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மோசமான சூழல் தற்போது உருவாகியுள்ளது.