Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திலிருந்து 2 பேரை எம்.பி.,யாக்க… பிரதமர் போட்ட பிளான்…. யாராக இருக்கும்?…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்போதுமே தமிழகம் மீதும், தமிழ் மீதும் தனிபாசம் உள்ளது. அவர் செங்கோட்டையில் கொடியேற்றினாலும், பார்லிமென்டில் பேசினாலும், தமிழின் பெருமைகளை கூறாமல் இருக்கமாட்டார். தமிழ்நாட்டின் மீது தனிகவனம் செலுத்திவரும் மோடி, தற்போது ஒரு புது முடிவு எடுத்துள்ளாராம். அதாவது அவர் தமிழகத்தில் இருந்து 2 பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கப் போகிறார். தமிழ்நாடு சட்டசபையில் பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள சூழ்நிலையில், மோடி இதற்கு ஒரு ஸ்பெஷல் திட்டம் வைத்து இருக்கிறார்.

ராஜ்யசபா தேர்தலில் ஒருவர் வெற்றிபெற குறைந்தது 35 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை என்றபோதும் ஜனாதிபதி 12 நபர்களை ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கலாம் என்கிறது சட்டம். விளையாட்டு, சமூக சேவை என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இப்படி எம்.பி.,யாக நியமிக்க இயலும். சச்சின் டெண்டுல்கர் உட்பட பல பேர் இப்படித்தான் ஜனாதிபதி நியமனம் மூலம் எம்.பி., ஆனார்கள். இவ்வழியைப் கடைபிடித்து 2 தமிழர்களை எம்.பி.யாக்க மோடி திட்டமிட்டு இருக்கிறார். இதற்கிடையில் யார் அந்த இருவர் என, பா.ஜ., வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில், மோடிக்கும், அமித் ஷாவிற்கு மட்டுமே அந்த இருவரின் பெயர் தெரியும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |