Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் ‘டில்லி மாடல்’…… 41 அரசு பள்ளிகளில் விரைவில்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 41 அரசு பள்ளிகளை டில்லி மாடலுக்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளிக் கல்வியில் பல மாற்றங்களை செய்து வருகின்றது. முக்கியமாக மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஆனால் அதில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள் மட்டும் வேறு சில பெயர்களில் செயல்பாட்டுக்கு வருகின்றது. அந்த வகையில் டெல்லியில் செயல்பட்டு வந்த மாடல் பள்ளிகள் போன்று தமிழகத்தில் உள்ள 41 அரசு பள்ளிகள் மாடல் பள்ளிகளாக மாற்றப்படுகின்றது. இவற்றில் 26 பள்ளிகள் தொகைசால் பள்ளிகளாகவும், 15 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாகவும் செயல்பட உள்ளன.

இதற்காக அதிமுக ஆட்சியின் போது மாதிரி பள்ளிகளாக செயல்பட்டு வந்த பள்ளிகளை தேர்வு செய்துள்ளது. மேலும் வரும் ஐந்தாம் தேதி சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இதற்கான துவக்க விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று தமிழக அரசின் டெல்லி மாடல் பள்ளி திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார். டெல்லியில் உள்ள மாடல் பள்ளிகளில் மத்திய அரசு நடத்தும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அதற்கான பாடத்திட்டங்களும் உள்ளன. தேசிய கல்விக் கொள்கையில் அமைந்துள்ள தேசபக்தி திட்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கலை, இசை, யோகாவுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அந்த மாடலை பின்பற்றி தமிழகத்தில் செயல்பட உள்ள 41 பள்ளிகளிலும் கூடுதல் மொழி கற்பித்தல், தேசபக்தி பாடத்திட்டம், நுழைவு தேர்வுக்கான பாடத்திட்டம் போன்றவை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |