Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திலும் தீர்மானம்…. EPSயின் திடீர் முடிவால் பாஜக அதிர்ச்சி ….!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்தப்பபோவதில்லை என்ற தீர்மானம் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டிலும் வண்ணாரப்பேட்டையில் CAAக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் , தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். திமுக திமுக பாஜக கூட்டணி அரசின் போது கொண்டுவரப்பட்டது.

தமிழக குடியுரிமைக்கான பட முடிவுகள்

மேலும் காங்கிரஸ் – திமுக கூட்டணியின் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. இப்போது NPRஇல் கூடுதலாக சில நடைமுறைகளை சேர்த்துள்ளார்கள்.ஒருவரின் அப்பா விவரம் , பிறந்த விவரம் தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் எந்த கட்டாயமும் இல்லை என்றும் இதனால் எந்த பிரச்சனையும் இல்லைஎன்று தெரிவித்தார்.

edappadi palanisamy ponrathakrishnanக்கான பட முடிவுகள்

மேலும் இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்தப்போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல தமிழகத்திலும் தீர்மானம் ஏற்றப்படுமா என்ற கேள்விக்கு அது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். CAA – NRC- NPR இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றே தெரிவித்து வந்த தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக கூறியது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |