ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுபெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 80 களிள் பல படங்களில் நடித்த மைக் மோகன் கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஹரா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் படக்குழுவினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில் ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதை போல தமிழக பெண்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.