Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே அதிக நபர்களுக்கு…. தடுப்பூசி செலுத்தி முதலிடம் பிடித்தது…. எந்த ஊர் தெரியுமா…??

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இதுவரை 31.51 கோடி தடுப்பூசிகள் இலவசமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதையயடுத்து தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே அதிக நபர்களுக்கு (90,000) கொரோனா தடுப்பூசி செலுத்தி சேப்பாக்கம் தொகுதி முதலிடம் பெற்றுள்ளது.

Categories

Tech |