சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவதில் சேலம் மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளதால் முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவது பற்றி தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சியில் 8வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் உள்ளது. அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8வது இடமும், தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழக சீர்மிகு நகரம் திட்ட பணிகள் துறை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.