தமிழகத்திலேயே மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய தலைமை ஆசிரியர் பள்ளியின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்த பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பள்ளியில் 3 மாடிகள் கொண்ட வளாகங்கள் உள்ளன. ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்வதற்காக ஆசிரியர்கள் அலைச்சலைக் குறைக்கும் வகையில் இண்டர்காம் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளும் வகையில் இந்த கருவி அமைந்துள்ளது. இதனால் எந்த வேலையாக இருந்தாலும் உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.
இதை அடுத்து தலைமை ஆசிரியரின் மகன் புகழ்பெற்ற ஆங்கில வழிக்கல்வியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். மற்ற மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். இது அனைவரும் இடமே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைஅடுத்து பள்ளிக்கு தேவையான விளையாட்டு மைதானம், பென்ச், மேஜை போன்றவற்றை எம்எல்ஏ மூலம் பேசி வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளார்.
மாணவர்களுக்கு அவசர காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் 108 மற்றும் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் போன்ற முக்கிய நம்பர்களை பலகையில் எழுதியுள்ளனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செயலாற்றி வருவதால் இந்தப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.