திருநெல்வேலி டவுண் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் யானையின் பெயர் காந்திமதி. இந்த யானை 13 வயதில் கோவிலுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது யானைக்கு 52 வயதாகிறது. இந்நிலையில், யானைக்கு வயது முதிர்வின் காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், காந்திமதிக்கு மருத்துவ குணம் வாய்ந்த செருப்புகளை, ரூபாய் 12,000 மதிப்பில் செய்த பக்தர்கள் அதனை யானைக்கு அணிவித்துள்ளனர். தமிழகத்திலேயே இந்த யானைக்குத்தான் முதல் முதலாகச் செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.