தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் 100% இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இதில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெயர் பெற்றுள்ளது நீலகிரி.