விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, “தென்னிந்திய சினிமாவின் ஆரம்பம் சென்னை தான்.
ஆனால் இங்கே வசதியான ஃபிலிம் சிட்டி இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. தரமணி இடத்தை சரியாக பராமரித்தால் திரைதுறைக்கு உதவியா இருக்கும். வெளிமாநிலத்திற்கு போக வேண்டிய சூழல்தான் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ஃபிலிம் சிட்டியை அரசு உருவாக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.