தமிழகத்தில் அடுத்த மாதத்திலிருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 342 அரசு இ-சேவை மையங்களிலும் இந்த அட்டைகள் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.