தமிழகத்தில் ஐந்தாம் கட்ட தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஐந்தாம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரையில் நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு.
- புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி கிடையாது.
- சுய விருப்பத்தின்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு.
- பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இயங்குவதற்கு தொடர்ந்து தடை.
- மதம், அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்கள் நடத்துவதற்கு தடை நீட்டிப்பு.
- உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் வழங்க அனுமதி.
- சென்னை விமான நிலையத்தில் 200 விமானங்கள் தரை இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.