Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிப்பது யார்…? பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் அடுத்த முதல்வர் யார் ?என்பது குறித்து 50 ஆயிரம் பேரிடம் ஜூனியர் விகடன் நடத்திய விரிவான கருத்துக் கணிப்பில் திமுக அதிக தொகுதிகள் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 163 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 52 தொகுதிகளிலும், அமமுக கூட்டணி 0, நாம் தமிழர் 0, மக்கள் நீதி மையம் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், 18 தொகுதியில் இழுபறி நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |