பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் எனும் கிராமம் இருக்கிறது.. இந்த கிராமத்தை ஒட்டி மலைப்பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கூரையில் குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் புதுக்கோட்டையில் CISF காவல்துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை சம்பவத்தை போன்று பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.