தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரத்தில் 138 ஏரிகள், செங்கல்பட்டில் 89 ஏரிகள்,திருவண்ணாமலையில் 44 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அடுத்த கோடையில் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை ஏற்படாது என நம்பலாம்.