தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஈரோடு, சென்னை, கோவை, நெல்லை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முந்தைய வாரங்கள் உடன் ஒப்பிடும்போது கொரோனா பரவலில் சராசரி உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் நடமாட தடை விதிக்கவும், கொரோனா பூஜ்ஜியமாக குறைப்பதை இலக்காக கொள்ளவும் என கூறியுள்ளார்.