தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஜனவரி 30-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories