கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1- 3 வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories