Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. உச்சி வெயிலில் மக்களுக்கு குளிர்ச்சி செய்தி….!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி விட்டது. இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அத்தியாவசிய காரணங்களைத் தவிர மற்ற காரணங்களுக்கு வெளியே செல்ல தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு சற்று குளிர்ச்சி தரும் விதமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருச்சி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை தரைக் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இரண்டு நாளைக்கு வெயில் இல்லாமல் குளுகுளு என்று இருக்கலாம்.

Categories

Tech |