Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில்…. 11 மாவட்டங்களில் மழை…. அலர்ட் அலர்ட்….!!!!

அசானி புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள்,அழுந்திக் கிடக்கும் மின் கம்பிகள் அருகே யாரும் செல்ல வேண்டாம்.உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு கீழ் மற்றும் அருகில் நின்று செல்போன் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |