Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை…. சற்றுமுன் புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் கரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மழை பெய்யும் போது மின்கம்பம் மற்றும் மரத்தடியில் நிற்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |