Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மக்களே அலர்ட்! அலர்ட்!….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நெல்லை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடையை கையில் எடுத்துச் செல்லுங்கள். மின் கம்பம் மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |