தமிழகத்தின் படி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் அக்டோபர் 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மழை பெய்யும்போது டிவி, போன், மிக்ஸி மற்றும் கணினி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். ஈரமான கைகளுடன் மின்சார ஸ்விட்ச், விளக்குகளை இயக்க வேண்டாம். அறுந்து கிடக்கும் மின்சார கம்பி அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.