தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போதைய சூழலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
அதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.