வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.