Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்… மக்களே சற்று கவனமா இருங்க…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.  அதுமட்டுமன்றி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக பட்ச வெப்ப நிலை காணப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |