Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது.சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Categories

Tech |