Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்… அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தென் மேற்கு வங்க கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடாஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |