Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில்…. தடுப்பூசி தீர்ந்துவிடும் – அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவை கட்டுபடுத்த இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 3 லட்சம் கொரோனா  தடுப்பூசி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபடும் பட்சத்தில்  அடுத்த மூன்று நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு  அனுப்பியுள்ள 1 லட்சம் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விடும் என்பதால் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |