Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 33 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

அசானி புயல் இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 33 மாவட்டங்களின் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |