Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |