Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் இன்று 19 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் நீலகிரியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |