தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.