தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.