Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. ஆனால் லீவு கிடையாது…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவாரூர், நீலகிரி,கரூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிதமான மழை மட்டும் பெய்யும் என்பதால் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர் .

Categories

Tech |