தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.