இலங்கை பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலு விளக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, நாமக்கல், திருப்பூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட 24 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.